இலங்கையிலுள்ள அரச வங்கியொன்று வங்குரோத்து அடைந்துள்ளமை தொடர்பில் இன்று காலை தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச வங்கியொன்று இவ்வாறு வங்குரோத்து நிலையில் இருந்தால், அது ஒரு பேரழிவாகவும், ஒரு பேரழிவின் தொடக்கமாகவும் இருக்கலாம்” என அவர் கூறினார்.
நாட்டின் கேள்விகளுக்கு பதிலளிக்க நிதி அமைச்சரோ அல்லது பொறுப்பான எவரும் ஒருபோதும் பாராளுமன்றத்திற்கு வரமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்