இன்று முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் நிலையினை கருத்திற்கொண்டு மாணவர்கள் இதுவரை குழுக்களாக பாடசாலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று முதல் சகல மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் பாடசாலைகளை நடத்த முடியாத சூழல் ஏற்படுமாயின் வலய கல்வி பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய அதிபர்களால் தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.