தற்போதைய சூழ்நிலையில் பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முக்கியமான தருணத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அமைச்சுப் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பகிர்வு தொடர்பாக இந்தக் குழுக்கள் ஆரம்பம் முதலே அதிருப்தியில் உள்ளன.
அதற்குப் பிறகு அரசு கடைப்பிடித்த கொள்கைகள் குறித்து மக்களிடையே ஒருவித விரக்தி ஏற்பட்டுள்ளது.
நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்களின் அதிருப்தி உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.