Our Feeds


Friday, March 18, 2022

SHAHNI RAMEES

கொரோனா காலத்தில் நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கான அறிவித்தல்!

 

கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் நீர் கட்டணப் பட்டியலைச் செலுத்ததாத சகல நுகர்வோரினதும் நீர்விநியோகத்தைத் துண்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காலத்தில் தொடர்ச்சியாக நீர்விநியோக வழங்கலினால் 7.5 பில்லியன் ரூபாவை பாவனையாளர்களிடமிருந்து அறவிட வேண்டியிருப்பதாக வடிகாலமைப்புச் சபையின் மேலதிக முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்தார்.

அந்த நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு பல முறை அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு பாவனையாளர்கள் பலர்  உரிய வகையில் பதிலளிக்க தவறிவிட்டுள்ளதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையிலேயே அவ்வாறனவர்களின் நீர்விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »