வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு, அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமையளித்து தேவையான எரிவாயுவை விநியோகிக்குமாறு எரிவாயு பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.