Our Feeds


Tuesday, March 29, 2022

ShortNews Admin

இலங்கை குறித்து எழுத வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி துஷ்பிரயோகம் - ஹோட்டல் உரிமையாளர் கைது - நடந்தது என்ன?



இலங்கைக்கு வருகை தந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண்ணைத் தொட்டு துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சிகிரியா, எஹெலகல பிரதேசத் தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரை சிகிரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.


33 வயதான பெல்ஜிய சுற்றுலாப் பயணி ஒருவர் மார்ச் 28 ஆம் திகதி சிகிரிய பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இந்தப் பெண் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சம்பந்தப்பட்ட நாடுகள் தொடர்பில் சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி வருவதாகவும், இம்முறை இலங்கை தொடர்பான கட்டுரையை எழுதுவதற்காக இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு வந்த அவர், சிகிரியா பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்குவதற்கு ஒன்லைனில் முன்பதிவு செய்துள்ளார்.

அந்தப் பெண்ணிடம் பேசிய ஹோட்டல் உரிமையாளர், தான் ஒரு சீன அக்குபஞ்சர் மருத்துவர் என்றும், பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும், முதுகுவலிக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி குறித்த பெண்ணின் உடலின் பல்வேறு பாகங்களைத் தொட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர் ஹோட்டலை விட்டு வெளியேறிய அவர் சிகிரியா பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு சுற்றுலா விடுதிக்குச் சென்று சிகிரியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிகிரியா, எஹெலகல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரை சிகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »