தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற மத வழிபாட்டு தளங்கள் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர் மேலும் தெரிவிக்கையில்,
வழிபாட்டு தளங்களின் செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும். மாற்றத்தையும் காண முடியும்.
மேலும் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர் "நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. முக்கிய பிரச்சனை கருவூலம் காலியாக உள்ளது. கருவூலம் காலியாகி உள்ளதால் ஏற்பட்டுள்ள விளைவை நாடு முழுவதும் காண முடியுமாக உள்ளது .
2007 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளை துறவிகள் முன்வந்து, அவர்களின் விகாரை செல்வங்களை, குறிப்பாக அங்கு வைத்திருந்த தங்கத்தை, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
"இந்த நேரத்தில் நாம் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
நாட்டில் நிறைய பௌத்த மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன, அவற்றில் ஏராளமான செல்வங்கள் உள்ளன.
தற்போதுள்ள மத ஸ்தலங்களிலிருந்து ஏதேனும் நன்கொடைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அறநிலையத்துறை, சில பொருளாதார நெருக்கடிகளை போக்க சில நன்கொடைகள் வழங்கப்படும், குறிப்பாக தங்கம் போன்ற வளங்களை கருவூலத்தில் வைப்பது, இது குறித்து அனைத்து மத தலைவர்களும், கவனம் செலுத்தினால் நல்லது என நாங்கள் கருதுகிறோம்.
குறிப்பாக சமய நிறுவனங்களின் நிதியுதவியால் , இந்த நேரத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும். அதேவேளை நாட்டில் ஒரு மாற்றத்தை நாம் காண முடியும் என மேலும் தெரிவித்தார்.