Our Feeds


Thursday, March 24, 2022

SHAHNI RAMEES

ஹிட்லரிடமிருந்து தப்பித்தவர், புதினால் கொல்லப்பட்டார்! நடந்தது என்ன?

 

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்துவரும் நிலையில் கடந்த மார்ச் 18 வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய ராணுவம் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் நடத்திய தாக்குதலில் 96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ புச்சென்வால்ட் என்பவர் கொல்லப்பட்டார். இவர் இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களிலிருந்து தப்பித்தவர்.

1926-ல் பிறந்த 96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ புச்சென்வால்ட், இரண்டாம் உலகப்போரின்போது 1942-ல் டார்ட்மண்ட் நாட்டிற்குக் கடத்தப்பட்டு அங்கு கட்டாய சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார். பின் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதால் அவர் 1943 இல் புச்சென்வால்ட் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார். இங்குதான் இரண்டாம் உலகப் போரின்போது 53,000-த்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பின்னர் அவர் பால்டிக் கடல் தீவான யூஸ்டோமில் உள்ள பீனெமுண்டேவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் V2 ராக்கெட் திட்டத்தில் கட்டாயத் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். இதேபோல் டோரா - மிட்டல்பாவ், பெர்கன் - பெல்சன் போன்ற வதை முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டு இருந்தார். இவ்வாறு ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களிலிருந்தும் தப்பித்தவர், தற்போது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

Borys Romanchenko, 96, survived four Nazi concentration camps: Buchenwald, Peenemünde, Mittelbau-Dora, Bergen-Belsen. He lived his quiet life in Kharkiv until recently. Last Friday a Russian bomb hit his house and killed him. Unspeakable crime. Survived Hitler, murdered by Putin. pic.twitter.com/QYJ4xrNYC9

— Dmytro Kuleba (@DmytroKuleba) March 21, 2022


இது குறித்து உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டரில், 'அவர் இறப்பதற்கு முன் வரை கார்கிவ்வில் தனது அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய ராணுவத்தின் வெடிகுண்டு இவரது வீட்டில் விழுந்து உயிரிழந்தார். ஹிட்லரிடமிருந்து உயிர் பிழைத்த இவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளார்' என்று கூறியுள்ளார். மேலும், இவர் ஹிட்லரின் நாஜி வதை முகாம்கள் பற்றிப் பல ஆவணங்களைப் பதிவு செய்ததில் பெரும் உதவியாக இருந்தாகவும் கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »