மருந்து தட்டுப்பாடு, மின்சார துண்டிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என தனியார் வைத்தியசாலை மற்றும் முதியோர் இல்லங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தனியார் வைத்தியசாலைகளுக்கு உடனடியாக மின்சாரம் மற்றும் அவசியமான எரிபொருள் என்பவற்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பல தடவைகள் கோரப்பட்ட போதிலும் அது இதுவரையில் இடம்பெறவில்லை என அந்த சம்மேளனத்தின் தலைவர் ஆனந்த குருப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.