எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வருகைத்தந்த நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 85 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேன் ஒன்றில் வருகைத் தந்து, எரிபொருளை நிரப்புவதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, அவர் அத்துருகிரிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர், இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெறும் போது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சன நெரிசல் காணப்படவில்லை என தெரிவித்த அத்துருகிரிய பொலிஸார், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.