இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு பால்மா பொதிகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், பால்மா விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் அதிகளவில் பசும்பாலை கொள்வனவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியொன்று 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
இதனடிப்படையில் அதனை 600 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற அதேவேளை, பெல்வத்தை தவிர்ந்த ஏனைய உள்நாட்டு பால்மா பொதிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் அதனை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.