சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளது.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி மாநாடென்பது ஊடக கண்காட்சியெனவும், பிரச்சினைகளை தீர்க்கும் உண்மையான நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி, தாம் ஏன் மாநாட்டை புறக்கணித்தோம் என்பது குறித்த விரிவான ஒரு அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியும் இம்மாநாட்டை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.