இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 600 ரூபாவினாலும், 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 260 ரூபாவினாலும் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக பால் மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.