நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றதாகத் தெரிவிக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நல்லாட்சி அரசாங்கம் தின்றத்தையே நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (23) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டு மக்களின் உணவுகளுக்காக அரசாங்கம் வெளிநாடுகளில் யாசம் பெறுவதாக எதிரக்கட்சியினர் எங்களை விமர்சிக்கிறார்கள். யாசகம் எடுத்தாவது நாட்டு மக்களுக்கு உணவளிப்போம் எனவும் தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் நாட்டுக்கு தேவையான எரிபொருள், கேஸ்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான நிலைமைகள் இல்லை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாட்டில் காணப்படும் தற்போதையப் பிரச்சினைகள் அனைத்தும் தற்காலிகமானது. இவற்றை தற்போதைய அரசாங்கம் விரைவிலேயே சரி செய்யும் எனவும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானோடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் நிலைக்கு நாட்டை நல்லாட்சி அரசாங்கமே தள்ளியது. நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றார்கள். அவர்கள் தின்றதை நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.