லாஃப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர் விலை 4,199 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், லாஃப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய, எந்த விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, விலை கட்டுப்பாடு இல்லாமைக் காரணமாக எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டார்.
மேலும், டொலர் பொறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பை அடிப்படையாக கொண்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கபபடலாம்.
விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் இல்லை.
அசாதாரண விலை அதிகரிப்பாயின் மாத்திரமே அமைச்சு தலையிடும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.