Our Feeds


Tuesday, March 22, 2022

ShortNews Admin

மக்களுக்கு முடிந்தளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்பி திஸாநாயக்க



(இராஜதுரை ஹஷான்)


ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில்தான் எரிபொருள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு முடிந்தளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என கைத்தொழில் வளங்கள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.


ஜனாதிபதி தலைமையில் 21ம் திகதி இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சமையல் எரிவாயு ,எரிபொருள் ஆகிய பிரச்சினை இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல முழு உலகமும் இப்பிரச்சினையை தற்போது எதிர்கொண்டுள்ளன.எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரிக்கப்படவில்லை.

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற தவறான புரிதலுடன் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கும் எரிபொருளை பெற்றுக்கொண்டு, தாங்கிகளிலும் எரிபொருளை நிரப்பிக் கொள்வதால்தான் தற்போது எரிபொருள் விநியோகத்தில் அதிக கேள்வி எழுந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »