அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் நேருக்கு நேராகப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
ஏற்கனவே பல முறை அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே,உக்ரைன் மற்றும் ரஷ்யா உயர் அதிகாரிகள் நேற்று காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மனிதநேய பாதைகளை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
போர் உக்கிரமாக நடைபெறும் மாரியுபோல் நகரில் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற மனித நேயப் பாதை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனிடையே கிவ் நகர் அருகே பொதுமக்களை வெளியேற்றும் போது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது