Our Feeds


Friday, March 18, 2022

SHAHNI RAMEES

வரிசையில் நின்று கோரிக்கை விடும் மக்கள் - வெளிநாட்டில் விளையாட்டில் குதூகலிக்கும் அமைச்சர் நடப்பது என்ன?

 

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாலைத்தீவில் உள்ள பறக்கும் பலகை பயிற்றுவிப்பாளர், நாமல் ராஜபக்சவின் புகைப்படத்தை வெளியிட்டு, இலங்கை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியால் அடிப்படை வசதிகள் இன்றி இலங்கையர்கள் தவித்து வரும் நிலையில், ராஜபக்ச மாலைதீவுக்கு விஜயம் செய்ததன் நோக்கம் என்ன என சமூக ஊடகங்களில் பல இலங்கையர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்ச இன்னும் பதிலளிக்கவில்லை.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »