ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமையை அடுத்து உத்தியோகப்பூர்வமாக இடம்பெறவுள்ள முதலாவது சந்திப்பு இதுவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்