சேஹ்ன் செனவிரத்ன
கட்டுகஸ்தோட்டை - பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புரவத்த பிரதேசத்தில் மூன்று பேரை பலியெடுத்த தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த யுவதிக்கும் இளைஞருக்குமிடையிலான காதல் தொடர்பே இந்த தீ பரவலக்கான காரணம் என்றும், இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனே தீயை வைத்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை (24) குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இளைஞன், வீட்டுக்குள் எவருக்கும் செல்ல முடியாத வகையில் கதவுகளை பூட்டி, தீயை வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த இளைஞன் ஏதோ ஒருவகையான திரவத்தை வீட்டுக்குள் வீசியுள்ளதாக வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் தாய் வாக்குமூலமளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இச்சம்பவத்தில் குறித்த இளைஞன், யுவதி மற்றும் யுவதியின் தந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.