(இராஜதுரை ஹஷான்)
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை தக்க வைத்துக் கொள்ள எதிர்க்கட்சியினரை ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
அசாங்கத்துடன் ஒன்றிணைய எதிர்தரப்பினர் இணக்கம் தெரிவிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிட்டு நிர்மூலமாக்கும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ அமெரிக்கா செல்லும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இனிவரும் காலங்களில் நாங்கள் சிறைக்கும் செல்லலாம் அல்லது மரணிக்கவும் நேரிடலாம். அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை. நிதியமைச்சர் பெசில் ராஜபக்க்ஷவின் தவறான நிதி முகாமைத்துவத்தினால் டொலர் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.