சிறைச்சாலை கைதிகளுக்கு தற்போதைய விலையேற்ற சூழ்நிலையில் உணவு வழங்குவதும் ஒரு தீவிர பிரச்சனையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் விலையை அதிகரிக்குமாறு உணவு வழங்குனர்கள் ஏற்கனவே சிறைச்சாலை பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவின் விலை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வழங்குனர்கள் தெரிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.