(எம்.மனோசித்ரா)
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு, இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் அந்நாடு சில திருத்தங்களை செய்துள்ளது.
அதற்கமைய இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் எச்சரிக்கை அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள், சமையல் எரிவாயு மற்றும் மருந்தக வளாகங்களில் பொருட் கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அது மாத்திரமின்றி உள்ளூராட்சி அதிகாரிகளின் தீர்மானங்களுக்கமைய அடிக்கடி மின் துண்டிப்பும் ஏற்படக் கூடும் என்பதையும் இங்கிலாந்து அந்நாட்டிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவிப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.