பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்குரிய தேசிய கொள்கைக்கான அவசியம் குறித்து மல்வத்து, அஸ்கிரி பீடங்களினால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேசிய பொருளாதார சபைக்கு, ஆலோசனைக் குழுவிடமிருந்து 5 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.