(எம்.எப்.எம்.பஸீர்)
உயர் நீதிமன்றுக்கு இன்று (28) நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகள் முன்வைத்துள்ளனர்.
நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு அழைத்த, மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு, மனுவுடன் தொடர்புடைய விடயம் அரசியலமைப்பின் 43(1),43(2) ஆகிய உறுப்புரைகளை ஆராய வேண்டிய விடயப் பரப்பாக காணப்படுவதால், பூரண நீதியரசர்கள் அமர்வு அதற்கு அவசியம் என சுட்டிக்காட்டினர்.
அத்துடன் அடுத்த தவணையில் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பதாக இந்த பூரண நீதியரசர்கள் அமர்வில் உள்ளடங்கும் நீதிபதிகளை பெயரிடுமாறும் அவர்கள் பிரதம நீதியரசரை கோரியுள்ளனர்.
ஏற்கனவே இந்த மனு உயர் நீதிமன்றால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பின்னணியில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.