முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
சிகிச்சை பலனின்றி இன்று (31) அதிகாலை அவர் காலமானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி பிறந்த அதாவுட செனவிரத்ன, இறக்கும் போது அவருக்கு 91 வயது.
அவர் 1989 இல் கேகாலை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
1957 ஆம் ஆண்டு கிராம சபைக்குத் தெரிவானதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்த இவர், மாகாண சபை உறுப்பினர், முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளையும், பிற்காலங்களில் பல்வேறு அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.