(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் உத்தரவுக்கமையவும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆலோசனையிலும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அவ்வாறு எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து மத்திய வங்கி ஆளுனரை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.