அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் 23ஆம் திகதி இந்த சர்வ கட்சி மாநாடு இடம்பெறவுள்ள நிலையில், குறித்த மாநாட்டை புறக்கணிப்பதாக குறித்த மூவரும் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த முறை சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.