மக்கள் தொடர்ந்து டீசலை வரம்பில்லாமல் பதுக்கி வைத்தால், டீசல் தட்டுப்பாடு மோசமாகி கட்டுப்படுத்த முடியாததாகிவிடும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.ஆர். ஓல்கா தெரிவித்துள்ளார்.
மேலதிகமாக டீசலை வாங்கி பதுக்கி வைக்க வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
எரிபொருள் இறக்குமதியில் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், தேவைக்கேற்ப எரிபொருள் தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.