நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடியானது அடுத்த வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடனாக பெற்றுள்ளதாகவும், அந்த பணத்தில் எரிபொருளை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், தொழில்துறை மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மேலும் 1500 மில்லியன் டொலர் கடன் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதனூடாக தற்போது பொருட்களை இறக்குமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.