இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தர உள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமான, அவர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
இதன்படி, எதிர்வரும் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அறிய முடிகின்றது. (