நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல ஆகியோர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக நிதியமைச்சு ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது இந்தியாவின் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பிலும் இந்தியாவுடன் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.