சர்வகட்சி மாநாட்டின் மூலம் அரசாங்கத்தை பலப்படுத்துவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நோக்கம் அல்ல. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பாரதூரமான நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிலர் விருப்பத்துடன் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் , சிலர் இதனை நிராகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது ஒவ்வொருவரதும் கொள்கையாகும். இது தொடர்பில் எம்மால் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு ஒத்துழைப்பு வழங்கி, இதில் கலந்து கொண்டு தமது யோசனைகளை முன்வைக்குமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.