சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் தமது நிறுவனம் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை என அவர் கூறினார்.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தற்போது அதிகாரம் கிடையாது என கூறிய அவர், விலை அதிகரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவையே வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இதன்படி, கடந்த திங்கட்கிழமையே தாம் இந்த கோரிக்கையை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வளவு விலை அதிகரிப்பு என்பது குறித்து தகவலை வெளியிட அவர் மறுப்பு தெரிவித்தார்.