Our Feeds


Monday, March 21, 2022

SHAHNI RAMEES

மன்னித்துக்கொள்ளுங்கள்: உண்மையை மறைத்து எந்த பயனும் இல்லை – அமைச்சர் ரொஷான்

 

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடமும் உரப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமும் தாம் மன்னிப்பு கோருவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உள்ளன, தற்போது மக்கள் அரசாங்கத்தை தூற்றுகின்றனர்.

இதுவே உண்மையான விடயம் என்பதோடு அதனை மறைத்து எந்த பயனும் இல்லை.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் சென்று எமக்கும் சகல விடயங்களும் சரியாக இடம்பெறுகின்றன எனவும் சிறப்பாக இடம்பெறுகின்றன எனவும் கூற முடியும்.

ஆனால் எத்தனை நாட்களுக்கு இவ்வாறு ஆம் என்று கூறிக் கொண்டிருக்க முடியும்.

நுகர்வோர், விவசாயிகள், கடற்றொழிலாளர் மற்றும் அரச சேவையாளர்கள் உள்ளிட்ட சகலரும் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

அழுத்தங்களை பிரயோகித்து மக்களை வழி நடத்த முடியாது.

மக்களின் பிரச்சினைகளுக்கும் செவிசாய்த்து செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »