பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் வரக்கூடும் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று இன்று (28) செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை சமாளிப்பதற்காக தேசிய அரசொன்று நிறுவப்படும் எனவும், அதில் பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதெனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டிலும் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.