எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு எதிர்வரும் வாரம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். எரிவாயு இறக்குமதிக்கு தேவையான கடன் பத்திரத்தை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ அமைச்சரவை கூட்டத்தின்போது குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையினால் நாளாந்தம் அமுல்படுத்தப்படும் மின்விநியோக தடை குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.