ரணிலின் பாராளுமன்ற ஆசனம் பிரதமர் ஆசனமாக மாறலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று (28) தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாட்டைக் கைப்பற்றினால் 48 மணித்தியாலங்களுக்குள் வரிசைகள் முடிவடையும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆட்சியின் மீதான சர்வதேச நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது என்றும் சர்வதேசம் நம்பும் ஆட்சி இலங்கையில் அமையும் போதே சர்வதேச உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும் என்றார்.