Our Feeds


Monday, March 21, 2022

SHAHNI RAMEES

‘சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று நாடகம் – நாம் பங்கேற்கமாட்டோம்’ – அநுர

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காதென அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.


 
” இந்த அரசுக்கு மக்கள் தொடர்பில் துளியளவும் அக்கறை இல்லை. பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்களும் இல்லை. எனவே, ஏமாற்று வேலையாகவே சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படுகின்றது. அவ்வாறான ஏமாற்று பொறிக்குள் எமது கட்சி சிக்காது.” – என்றும் அநுர திஸாநாயக்க குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »