Our Feeds


Friday, March 18, 2022

SHAHNI RAMEES

அதிசொகுசு வாகன அணிவகுப்பால் குழப்பம்: அமைச்சர் நாமலுக்கு தொடர்பில்லை என மறுப்பு!

 

அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவோ அல்லது அவரது சகோதரர்களோ ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் இணைப்புச் செயலாளரும், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளருமான கீதநாத் காசிலிங்கம் இந்த விடயத்தைக குறிப்பிட்டுள்ளார்.



குறித்த வாகன அணி வகுப்பு புத்தளம் – தலுவ சந்தியையடைந்த நிலையில் அங்கு எரிபொருளுக்காக காத்திருந்த மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளானது. கற்பிட்டி – மீகட்டுவத்த சுமித தேரர் உள்ளிட்ட பிரதேசவாசிகளும் இணைந்து குறித்த சொகுசு வாகன அணிவகுப்பை தடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.




மேலும் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களிள் அணிவகுப்பில் பங்கேற்றிருந்ததாக பல்வேறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை தொடர்ந்தே இந்த விடயம் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை செய்திருக்கும் கீதநாத் காசிலிங்கம், இது தனியார் வாகன அணிவகுப்பு எனவும், சிலர் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »