நாட்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 300 ஆக உயர்ந்துள்ளதால் மருந்துகளின் விலையை மேலும் 20% அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்கள் சபை மருந்து உற்பத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சுக்கு நேற்றைய தினம் (28) அறிவித்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் மருந்துகளின் விலையை 29% உயர்த்த சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் பரசிட்டமோல் மாத்திரை ரூ.1.59ல் இருந்து ரூ.3 ஆக உயர்வடைந்தது.
இந் நிலையில் மீண்டும் மருந்துகளின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மருந்துகளின் விலை உயரவில்லை என்றால் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.