இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை நாளை கூடவுள்ளது.
கொட்டக்கலையில் உள்ள சி.எல்.எஃப் வளாகத்தில் நாளை (30) முற்பகல் தேசிய சபை கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளைய கூட்டத்தில் தற்போதைய அரசியல் விடயம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது.
அதன் முன்னாள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலமானதை அடுத்து புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் நாளைய தினம் தேசிய சபை கூடி புதிய தலைவரை தெரிவு செய்யவுள்ளதோடு தலைவர் தேர்வுக்காக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் நாளைய தினமே அறிவிக்கப்படுவர்.
பின்னர் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய தலைவர் நியமனம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவர் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.