இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரியொருவர் தெரிவித்தார்.
தங்க விற்பனையாளர்களின் இன்றைய தகவலின் படி, 22 கரட் தங்கத்தின் விலை 185,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
மேலும், 24 கரட் தங்கத்தின் விலை 200,000 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை அதிகரிப்புடன், உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.