Our Feeds


Tuesday, March 29, 2022

SHAHNI RAMEES

ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை : அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம்

 

பதவிக்காலம் முடியும் வரை தான் நாட்டின் பிரதமராக நீடிப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் உடனே ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக தேசிய அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவது போன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.


 
எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி.


 
தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »