சுவீடன் நாட்டு இசை கலைத்துறை நிறுவனமான Spotify தனது பணியினை ரஷ்யாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம் செய்கின்றது.
ரஷ்யாவில் தற்போது காணப்படுகின்ற சர்வாதிகார நடைமுறைச் சட்டங்களை விமர்சித்தே மேற்படி நிறுவனம் தனது வெளிநாட்டு இசைத் துறை பணியாளர்களை ரஷ்யாவிலிருந்து வெளியேறுமாறு பணித்துள்ளமை குறிப்பிட்த்தக்கது.
அதேவேளை Netflix மற்றும் TikTok போன்ற பொழுது போக்கு சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து ரஷ்யாவினால் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.