பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வரான அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும் ஒரேமாதிரியான அறிவிப்பை விடுத்துள்ளனர்.
முன்னதாக அறிவிப்பை விடுத்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் கடமையாற்றுவோர், வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறைமைக்கு மாறுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இதேமாதிரியான அறிவிப்பை விடுத்துள்ளார். எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக வீட்டில் இருந்தே வேலை செய்யும் நிலைக்கு மாறுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் தனக்கு உட்பட்ட அனைத்து அமைச்சுக்களின் ஊழியர்களுக்கும் அறிவித்துள்ளார்.