கெரவலப்பிட்டி உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்களுக்கு சுமார் 9,000 மெற்றிக் டன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டி அனல் மின்நிலையம் எரிபொருள் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் (24) முதல் செயலிழந்திருந்தது.
இந்த மின்நிலையம் மூலம் நாட்டுக்கு 270 மெகாவோட் மின்சாரம் வழங்கப்படுகிறது.
எரிபொருள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் பல மின்னுற்பத்தி நிலையங்கள் இன்னும் செயல்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.