எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளனர்.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (24) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பிய போதே மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.