(எம்.மனோசித்ரா)
இலங்கை மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ வரையான விமான போக்குவரத்து சேவையை இன்று (28) திங்கட்கிழமை முதல் இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாக ரஷ்யா மீதான விமானக் காப்புறுதி கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நிதிக் கட்டுப்பாடுகள் தமது நிறுவனத்தில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அதற்கமையவே மறு அறிவித்தல்வரை மொஸ்கோவுக்கான விமான சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த முடிவினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு விமான நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.