நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று (25) அவிசாவளை நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, “மத்திய வங்கி ஆளுநரே இராஜினாமா செய்” “அமெரிக்கர்களை விரட்டுவோம்” “பிரதமரே பதவி விலகு” உள்ளிட்ட பதாதைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.